Home Featured நாடு பாராலிம்பிக்ஸ்: மலேசிய தங்கப் பதக்க வீரர்களுக்கு கியா கார்கள்

பாராலிம்பிக்ஸ்: மலேசிய தங்கப் பதக்க வீரர்களுக்கு கியா கார்கள்

1135
0
SHARE
Ad

mohamad-ridzuan-mohamad-puzi-paralympics-gold-winner

கோலாலம்பூர் – ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இரண்டு மலேசியர்கள் தங்கம் வென்றுள்ளனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முகமட் ரிட்சுவான் முகமட் புசி (மேலே – படம்) மலேசியாவின் முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 12.07 வினாடிகளில் ஓடி புதிய பாராலிம்பிக்ஸ் சாதனையையும் முகமட் ரிட்சுவான் நிகழ்த்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, முகமட் ஸியாட் சோல்கெஃப்லி, அதிக தூரம் இரும்புக் குண்டு வீசும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதோடு, புதிய உலக சாதனையையும் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கான பரிசுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

muhammad-ziyad-zolkefli-paralympics-goldஅதிக தூரம் இரும்புபுக் குண்டு வீசி தங்கப் பதக்கம் பெற்ற முகமட் ஸியாட் சோல்கெஃப்லி

தங்கப் பதக்கம் வென்ற இரு மலேசியர்களுக்கும் கியா ஸ்போர்ட்டேஜ் என்ற தங்களின் வாகனத்தை அன்பளிப்பாக வழங்குவதாக நாஸா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.எம்.நசாருடின் எஸ்.எம்.நசிமுடின் இன்று அறிவித்துள்ளார்.

மலேசியாவின் உள்நாட்டு நிறுவனம் என்ற முறையில் உள்நாட்டிலேயே உருவான இரண்டு சிறந்த விளையாட்டாளர்களுக்கு, நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுப் பெருமை சேர்த்த அவர்களுக்கு – தங்களின் புதிய வாகனங்களை அன்பளிப்பு வழங்குவதில் பெருமையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்களின் உடற்குறைகளையும் மீறி ‘மலேசியா போலே’ என்ற சாதனை முழக்கத்தை செயல்படுத்திய காட்டியுள்ள அவர்களைப் பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் நசாருடின் கூறியுள்ளார்.

kia_sportage_

பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்க வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் கியா ஸ்போர்ட்டேஜ் கார் ஒன்றின் மாதிரி…