கோலாலம்பூர்: முஸ்லிமல்லாதவர்களால் தயாரிக்கப்பட்ட ஹலால் தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான இணைய வழியிலான பிரச்சாரம் ஆக்கபூர்வமானதல்ல என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் முகமட் ரிட்சுவான் முகமட் யூசோப் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் விவரித்தார்.
இது போன்ற பிரச்சாரங்களை ஒரு பன்முக நாட்டில் இடம் பெறச் செய்யக்கூடாது என்று ரிட்சுவான் கூறினார்.
“உதாரணமாக வடக்கில், 70 விழுக்காடு சில ஹலால் பொருட்கள் முஸ்லிமல்லாதவர்களால் தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு பிரச்சனையல்ல. இந்த பிரச்சாரம் சரியாக இல்லை. அது ஹலால் என்றால் போதுமானது. இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிலிருந்து ஹலால் சான்றிதழ் இருந்தால், அது விற்பனை செய்வதற்கு போதும். ஆக்கபூர்வமற்ற புறக்கணிப்புகள் தேவையற்றவை” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் இது போன்ற பிரச்சாரங்கள் பரவுவதை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்றும் ரிட்சுவான் கூறினார்.