Home One Line P2 காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!

1416
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று வியாழக்கிழமை நாட்டின் குடிமக்களை காஷ்மீர் மக்களுக்கான ஆதரவைக் காட்ட வெள்ளிக்கிழமை அரை மணி நேரம் சாலையில் பேரணி நடத்துமாறு கேட்டுக் கொண்டார் என்று இந்தியா டுடே பதிவிட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது சட்டத்தை இரத்து செய்ததற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவு மற்றும் அப்பகுதியில் தொடர்ந்து தகவல் தொடர்பு இருட்டடிப்பு குறித்து பாகிஸ்தான் தனது ஆட்சேபனை குறித்து கடுமையாக குரலை கொடுத்து வருகிறது.

#TamilSchoolmychoice

எனவே, நான் அனைத்து பாகிஸ்தானியர்களையும் கேட்கிறேன், நாளை (இன்று வெள்ளிக்கிழமை) அரை மணி நேரம், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை நிறுத்திவிட்டு, காஷ்மீர் மக்களுக்கான ஆதரவைக் காட்ட சாலையில் வெளியே வாருங்கள்என்று இம்ரான் கான் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது அதன் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று என்று பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததற்கான, பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை அனைத்துலகமயமாக்க முயற்சிக்கிறது.

370-வது சட்டப் பிரிவை அகற்றுவது உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா அனைத்துலக சமூகத்திடம் திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது. இருப்பினும், அடுத்த மாதம் நடைபெறும் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எடுத்துச் செல்வேன் என்று இம்ரான் கான் பலமுறை கூறி வருகிறார்.