சென்னை – உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு ஆயிரக்கணக்கான அதிமுக ஆதரவாளர்களும், பொதுமக்களும் கூடியுள்ளனர்.
ஜெயலலிதா காய்ச்சல் காரணமாகவும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் உடல் நலத்துடன் உள்ளார் என்றும் அப்போல்லோ மருத்துவமனை நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 9.30 மணியளவில் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்த உயர் அதிகாரிகள் கூட்டத்தை தனது இல்லத்தில் ஜெயலலிதா கூட்டினார். அந்தக் கூட்டத்தின் போதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(மேலும் செய்திகள் தொடரும்)