டாவோ, பிலிப்பைன்ஸ் – சனிக்கிழமை பிலிப்பைன்சின் மிண்டானோ தீவை 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதனால் அத்தீவில் உள்ள வீடுகள், தங்கும்விடுதிகள், கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடங்கள் ஆகியவை குலுங்கியதால், அதிலிருந்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
எனினும், இதுவரை சேதநிலவரங்கள் குறித்த முழுத்தகவல்கள் தெரியவில்லை.
#TamilSchoolmychoice
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், காலை 6.52 மணியளவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 114 கிலோமீட்டர் மையத்தில், கிழக்கு டாவோவைச் சேர்ந்த மிண்டானோவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.