மலேசிய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் ‘மைகேர்’ (Humanitarian Malaysian Care (MyCare) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், மலேசியப் பேராளர் டாக்டர் பவுசியா மொகமட் ஹசான் உட்பட அனைத்துப் பேராளர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
‘காசா செல்லும் மகளிர் படகு – Women’s Boat to Gaza’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், காசாவில் இஸ்ரேல் முற்றுகையை எதிர்க்கும் வகையில் பாலஸ்தீன மக்களுக்கு உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தி அக்கப்பல் சென்றது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை, அப்படகு இஸ்ரேல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments