Home Featured கலையுலகம் இன்று வெள்ளிக்கிழமைப் படங்கள் ரெமோ, றெக்க, தேவி – வெற்றி யாருக்கு?

இன்று வெள்ளிக்கிழமைப் படங்கள் ரெமோ, றெக்க, தேவி – வெற்றி யாருக்கு?

1266
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை, முன்னணிக் கதாநாயகர்கள் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ:

sivakarthigeyan-remoசிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள ‘ரெமோ’ திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.  24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் பிரம்மாண்டத் தயாரிப்பில் உருவாகியுள்ள, இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

விஜய்சேதுபதி நடிப்பில் றெக்க:

rekkaஅருண் விஜயை வைத்து ‘வா டீல்’ என்ற படத்தை இயக்கிய ரத்தின சிவா, தற்போது விஜய் சேதுபதியை கதாநாயகனாக்கி இயக்கியிருக்கும் படம் றெக்க. விஜய் சேதுபதி வழக்கறிஞராக நடித்திருக்கும் இப்படத்தில், லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களோடு, நாசர், கிஷோர், சதீஷ், ஹரீஸ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

லட்சுமி மேனனை கடத்தப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

பிரபுதேவா நடிப்பில் தேவி:

devi-movie-stills-3நீண்டநாட்களுக்குப் பிறகு பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தேவி. இப்படத்தில், தமன்னா, சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கிராமத்துப் பெண்ணான தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு வருகிறார் பிரபுதேவா. அவர் தங்கியிருந்த வீட்டில் இருக்கும் ரூபி என்ற பெண்ணின் ஆவி தமன்னாவுக்குள் புகுந்து கொள்கிறது. அதற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு சில விதிமுறைகளுடன் ஒத்துக் கொள்கிறார் பிரபுதேவா. ஆவி  தமன்னாவை விட்டு வெளியேறியதா என்ன ஆனது என்பது தான் கதை.

தமிழில் தேவி, தெலுங்கில் அபிநேத்ரி, இந்தியில் துக் துக் துதியா என மூன்று மொழிகளில் வெளியாகிறது இத்திரைப்படம்.

இப்படங்களின் விமர்சனங்கள் இன்று செல்லியலில் வெளியாகும். தொடர்ந்து செல்லியலுடன் இணைந்திருங்கள்!