Home Featured இந்தியா தோனி மனைவி சாக்‌ஷி மீது பண மோசடி வழக்கு!

தோனி மனைவி சாக்‌ஷி மீது பண மோசடி வழக்கு!

940
0
SHARE
Ad

dhoni-reveals-twoபுதுடெல்லி – கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் மனைவி சாக்‌ஷி மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டென்னிஸ் அரோரா என்பவர் ஹரியானா மாநிலம் குர்கான் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் ஒன்றில், ‘ரிதி எம்.எஸ்.டி., அல்மோடே பிரைவேட் லிமிடெட்’ என்ற உடற்பயிற்சி நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்றதாகவும், அதில் தனக்குச் சேர வேண்டிய, 11 கோடி ரூபாயில், 2.25 கோடி ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும், மீதிப் பணத்தை, நிறுவன இயக்குனர்கள் தராமல் மோசடி செய்துள்ளதாகவும் டென்னிஸ் அரோரா தெரிவித்துள்ளார்.

அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் தோனியின் மனைவி சாக்‌ஷியும் ஒருவர் என்பதால், அந்தப் புகாரில் அவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், இயக்குனர்களில் ஒருவரான அருண் பாண்டே கூறுகையில், ”நிறுவனத்தை விட்டு, ஒரு ஆண்டுக்கு முன்பே, சாக்‌ஷி சென்று விட்டார். எனவே, அவருக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.