Home One Line P2 “எம்.எஸ்.தோனி” – திரைப்பட நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை

“எம்.எஸ்.தோனி” – திரைப்பட நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை

900
0
SHARE
Ad

மும்பை – இந்திப்பட உலகின் வளர்ந்து வரும் இளம் கதாநாயக நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை  செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு வயது 34.

பல இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமான அவர் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படமாக வெளிவந்த எம்எஸ் தோனி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தோனியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அந்தப் படத்தில் தோனியாகவே மிகச் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுதலையும் அவர் பெற்றிருந்தார்.

அந்தப் படம் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது இந்திய திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

சக நடிகர்களின் இரங்கல்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.