Home One Line P2 கிரிக்கெட்டிலிருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுகின்றனர்

கிரிக்கெட்டிலிருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுகின்றனர்

675
0
SHARE
Ad

புதுடில்லி – அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறப் போவதாக கிரிக்கெட் இந்திய அணியின் முன்னாள் தலைவர் (கேப்டன்) மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் இரசிகர்களிடையே தோனியின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தோனியின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மற்றொரு முன்னணி விளையாட்டாளரான சுரேஷ் ரெய்னா தனது விளையாட்டு ஓய்வை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து தோனியின் பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நடிகரும் மக்கள் நீதிமய்ய அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் “வாழ்க்கையிலும் விளையாட்டிலும் சாதனை புரிய தன்னம்பிக்கை எப்படி உதவும் என்று விளக்கியதற்கு நன்றி தோனி” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சிறிய ஊரில் இருந்து தொடங்கி, இந்திய அணியின் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா உலகக் கிண்ணக் கோப்பையை வெல்வதற்கும் மூலகாரணமாக தோனி திகழ்ந்தார்.

பின்னர் ஐபிஎல் போட்டிகளில் சென்னையைப் பிரதிநிதித்து விளையாடினார். அப்போது அவருடன் இணைந்து விளையாடியவர்தான் சுரேஷ் ரெய்னா.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சென்னை அணியில் ஐபிஎல் போட்டிகளுக்காகத் தொடர்ந்து விளையாடப் போவதாக தோனி அறிவித்திருக்கிறார். இதற்காகவும் கமல்ஹாசன் தோனிக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

“சென்னை மீதான உங்கள் காதல் மகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் வெளிவந்தது. தோனியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சுஷாந்த் சிங். அண்மையில்தான் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.