Home One Line P1 சபாவில் தேர்தல் நடக்குமா? இன்று தெரிய வரும்

சபாவில் தேர்தல் நடக்குமா? இன்று தெரிய வரும்

585
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபாவில் இரண்டு முக்கிய நிகழ்வுகளை மக்கள் எதிர் பார்த்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் சபா மாநிலத் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு மற்றும் சட்டமன்றம் கலைக்கப்படுவதை நிறுத்தி வைக்க 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட நீதிமன்ற வழக்கு ஆகியவை இன்று முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக , தேர்தல் ஆணையம் இன்று காலை 10 மணிக்கு இது குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது, ஆனால் பின்னர் அதை மாலை 4 மணிக்கு மாற்றியமைத்தது.

#TamilSchoolmychoice

முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் சட்ட நடவடிக்கை, ஜூலை 30- ஆம் தேதி மாநில ஆளுநர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்ததை கேள்விக்குள்ளாக்குகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல்களுக்கு தயாராகி வருவதால், உயர்நீதிமன்ற விசாரணை தேர்தலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது முக்கிய விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 7 அன்று சரவாக் உயர்நீதிமன்ற நீதிபதி, நீதித்துறை ஆணையர் லியோனார்ட் சின், 33 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கை செவி மடுக்கவும், முடிவு செய்யவும் நீதிமன்றத்திற்கு, நீதித்துறை அதிகாரம் அளித்துள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர்களிடமிருந்து மேலதிக வாதங்களை கேட்க ஆகஸ்ட் 17 தேதியை அறிவித்தார்.

அண்மையில்,  சபா மாநிலத் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 17 அன்று சிறப்பு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

தேர்தல் வேட்பாளர், நியமனம் நாள், வாக்களிக்கும் நாள், வாக்காளர் பதிவு போன்ற தேர்தல் விஷயங்களின் முக்கியமான தேதிகள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பிற ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதே இந்த சிறப்புக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.