கோலாலம்பூர் – இறந்த புலி ஒன்றின் அருகில் சிலர் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. அதனை அறிந்த வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (Wildlife and National Parks Department) அது குறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையின் இயக்குநர் அப்துல் காதிர் அபு ஹாசிம் கூறுகையில், “இந்த விவகாரத்தை நாங்கள் அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பவந்தப்பட்டவர்களுக்கு 500,000 ரிங்கிட் வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படலாம்.