Home Featured கலையுலகம் சிவா கண்ணீருக்கு சிம்பு ஆதரவுக் கரம் – இருவரையும் கலங்க வைத்த ‘அவர்’ யார்?

சிவா கண்ணீருக்கு சிம்பு ஆதரவுக் கரம் – இருவரையும் கலங்க வைத்த ‘அவர்’ யார்?

991
0
SHARE
Ad

shiva-simbuசென்னை – தனது படங்களுக்கு சிலர் பல்வேறு வகையில் இடையூறு செய்வதாக ‘ரெமோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டது, தமிழ் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சிம்பு தானாக முன்வந்து ஆதரவுக் கரம் நீட்டி உள்ளார்.

இது தொடர்பாக சிம்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகார்த்திகேயன் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். அவர்கள் கொடுக்கும் தொல்லைகளும் நல்லது தான். கடின உழைப்பு அதற்கு பதில் சொல்லும். எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்” என்று கூறியுள்ளார்.

சிவா குறிப்பிட்ட அந்த நபர் யார்? சிம்பு தனக்குத் தெரியும் என்று சொல்லும் அந்நபர் யார்? என்பது குறித்து நட்பு ஊடகங்களில் தற்போது பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

குறிப்பாக, இந்த விவகாரத்தில், நடிகர் தனுஷைக் குறிப்பிடும் பலர், சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைப் பிடிக்காத தனுஷ் தான் இதையெல்லாம் செய்வதாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே தனுஷிற்கும், அனிருத்திற்கும் பிரிவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், ‘ரெமோ’ படத்தில் அனிருத் பணியாற்றியிருப்பது, தனுஷின் ‘கொடி’ திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தற்போது சிவாவிற்கு முன்பணம் கொடுத்ததாகக் கூறுவது போன்றவை ஒரே நேரகோட்டில் வருகின்றன.
இதனிடையே, நடிகர் விஷால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாவுக்கு மட்டுமல்ல தானும் அது போன்ற கட்டப்பஞ்சாயத்துக்களை சமாளித்து வருவதாகவும், விரைவில் சிவா கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.