Home One Line P1 70-க்கும் மேற்பட்ட தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை!

70-க்கும் மேற்பட்ட தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை!

1489
0
SHARE
Ad

தாவாவ்: தாவாவ் மாவட்டத்தின் சுங்கை உடினில் சுட்டுக் கொல்லப்பட்ட யானை மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கால்நடை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் குழு, அவ்விலங்கின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளது.

ஒரு விரிவான பரிசோதனையில், யானையின் உடம்பினில் 70-க்கும் மேற்பட்ட தோட்டாக்களால் சிதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தந்தங்கள் அகற்றப்படுவதற்கு முன்பு நெருங்கிய தூரத்திலிருந்து அந்த யானை சுடப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

யானை கொல்லப்பட்டதில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து வேட்டைக்காரர்கள் ஈடுபட்டதாக சபா வனவிலங்கு துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

சுடப்படதன் விளைவாக யானைக்கு தலையில் எலும்பு முறிந்து மண்டையில் ஊடுருவி மூளையை அழித்துள்ளது. அதாவது இது நடந்த பிறகு மரணம் உடனடியாக நிகழ்ந்திருக்கும்.

இருப்பினும், 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததால், யானை முதலில் எந்த இடத்தில் சுடப்பட்டது என்பதை தீர்மானிக்க கடினமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சபா வனவிலங்குத் துறை இயக்குனர் அகஸ்டின் துகாவை தொடர்பு கொண்டபோது, ​​பிரேத பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், யானையின் மரணத்தின் தன்மை கொடூரமானது என்றும் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், அவர் கண்டுபிடிப்புகள் பற்றி விரிவாகக் கூறவில்லை.

இவ்வகை யானைகள் 1997-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முற்றிலும் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அதனைக் கொன்ற குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 250,000 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.

விவசாயிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுக்கு தொல்லையாக இருந்து வருவதால் யானைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொல்லப்படுகின்றன