Home One Line P2 தளபதி 64-இல் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியா?

தளபதி 64-இல் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியா?

916
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிகில் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில், விஜய்யின் 64-வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் 64 படத்தை மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தளபதி 64′ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிலித்குமார் தான் விஜய் சேதுபதி நடித்து வரும்துக்ளக் தர்பார்படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இப்படத்திற்காக விஜய் சேதுபதி வழங்கிய தேதிகளை மாற்றியமைக்க ஆலோசனை கூறியுள்ளார். அதனை ஏற்று கொண்ட விஜய் சேதுபதி, ‘தளபதி 64′ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெறிவிக்கின்றன.

#TamilSchoolmychoice