சுபாங் – இன்று புதன்கிழமை, இந்தோனிசியாவின் ஜாவா தீவில் வடக்குக் கடற்பரப்பில் 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி, மலேசியாவின் சுபாங்கிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் வட-கிழக்கில், மேற்கு ஜாவாவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக யுஎஸ்ஜிஎஸ் அறிவித்துள்ளது.
கடலின் 614 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்த பாதிப்புகள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.