Home Featured உலகம் கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

821
0
SHARE
Ad

death-sentenceரியாத் – கொலை வழக்கு ஒன்றிற்காக தங்கள் நாட்டு இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா.

கைகலப்பின் போது அடெல் அல் மஹேமிட் என்பவரைச் சுட்டுக் கொன்றதற்காக இளவரசர் துருக்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தலைநகர் ரியாத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, ரியாத் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இளவரசர் கபீர் சுட்டதில் அவரது நண்பர் மரணமடைந்ததோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, இந்தக் கொலைக்காக இளவரசருக்கு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

இந்நிலையில், நேற்று இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.