Home Featured நாடு ஜமால் கூறியிருப்பது வெறும் “வார்த்தைப் போர்” தான் – ஐஜிபி கருத்து!

ஜமால் கூறியிருப்பது வெறும் “வார்த்தைப் போர்” தான் – ஐஜிபி கருத்து!

517
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – பிணையில் விடுதலையான சிவப்புச் சட்டை அமைப்பின் தலைவர் ஜமால் மொகமட் யூனுஸ், பெர்சே அமைப்பிற்கு எதிராகப் போர் தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் அவ்வாறு போர் என்று கூறியிருப்பது, வெறும் “வார்த்தை போர்” தான் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“சும்மா வெறுமனே போர் என்று அறிவிப்பது, என்னைப் பொறுத்தவரை அது வார்த்தைப் போர் தான்” என்று கோலாலம்பூரில் இன்று வெள்ளிக்கிழமை மலேசியக் காவல்படைக் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறுகையில், ஜமால் போர் என்று பிரகடனப்படுத்தியிருப்பதை அச்சுறுத்தலாக யாராவது எடுத்துக் கொண்டால், ஜமாலுக்கு எதிராக புகார் அளிக்கலாம் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இரண்டு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்ட ஜமால், ஒரே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டது குறித்து காலிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதிலளித்துள்ள அவர், காவல்துறைத் தனது விசாரணையை நிறைவு செய்து விட்டது என்பதால், அவரது தடுப்புக் காவலை நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.