Home Featured உலகம் உலகப் பார்வை: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு முறை – தேர்வு முறை என்ன?

உலகப் பார்வை: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு முறை – தேர்வு முறை என்ன?

641
0
SHARE
Ad

White_House_

பலரும் நினைப்பதுபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்கள் நேரடியாக வாக்களித்தாலும், அவர்களின் வாக்குகள் அதிபராக வெல்வது யார் என்பதை இறுதியில் நிர்ணயிக்கப் போவதில்லை. மாறாக, ஒரு சிக்கலான நடைமுறையின் கீழ் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

எப்படி என்று பார்ப்போம்!

  • அமெரிக்காவின் மொத்த மாநிலங்கள் 50. அந்த 50 மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்து தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்படுகின்றன. எலெக்டோரல் காலேஜ் (Electoral College) என அழைக்கப்படும் இந்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 538 ஆகும். 2012, 2016, 2020 அதிபர் தேர்தல்களில் இந்த எண்ணிக்கைதான் பின்பற்றப்பட வேண்டும். அந்தப் பட்டியலை கீழே காணலாம்.
#TamilSchoolmychoice

electoral-votes-by-stateselectoral-votes-by-states-2

 

  • இதன்படி அமெரிக்க காங்கிரஸ் அவையில் 435 பேர் இருப்பார்கள். அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்கள் 100 பேர் இருப்பார்கள். கொலம்பியா வட்டாரத்திற்கு மூன்று தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்படுகின்றன. ஆக மொத்தம் 538.
  • ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி 50 மாநிலங்கள், தலா 2 செனட்டர் என மொத்தம் 100 செனட்டர்கள் பதவியில் இருப்பார்கள்.
  • உதாரணமாக கலிபோர்னியா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 55 தேர்தல் வாக்குகள் உள்ளன. இதில் இரண்டு செனட்டர்கள், 53 காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் இருப்பார்கள். செனட் என்று வரும்போது சிறிய மாநிலமாக இருந்தாலும் 2 செனட்டர் பதவிகள் ஒதுக்கப்படும்.
  • us-presidential-election-electoral-votes

மாநிலம் வாரியாக தேர்தல் வாக்குகளைக் காட்டும் வரைபடம்….

  • அதிபர் தேர்தல் அன்று பொதுமக்களாகிய வாக்காளர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது அந்த மாநிலத்தில் எந்த வேட்பாளருக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கிறதோ அந்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து தேர்தல் வாக்குகளும் மொத்தமாக வழங்கப்படும். உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் டிரம்புக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்து, 49 சதவீத வாக்குகள் ஹிலாரிக்குக் கிடைத்தால், அந்த மாநிலத்தின் 55 தேர்தல் வாக்குகளும் மொத்தமாக டிரம்புக்கு சென்று விடும். விகிதாச்சாரப்படி பிரிக்கப்படாது.
  • எனவே, ஒரு மாநிலத்தில் வெல்லும் ஒரு வேட்பாளர் மற்றொரு மாநிலத்தில் தோல்வியடையக் கூடும். அதே வேளையில் ஒரு வேட்பாளர் அதிக வாக்குகள் கொண்ட மாநிலத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். உதாரணமாக டிரம்ப் இரண்டு அல்லது மூன்று வாக்குகளைக் கொண்ட மாநிலங்களை வெல்லலாம். அதனால் அவரது வெற்றி சாத்தியமாகாது. கலிபோர்னியா போன்ற பெரிய மாநிலங்களில் எந்த வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகள் பெறுகின்றார் என்பதை வைத்துத்தான் ஒருவரின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.us-parliament

அமெரிக்க நாடாளுமன்றத்தின் தோற்றம்…

  • ஆக, இப்படியாக மாநிலங்களின் மொத்த தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 538 ஆகும். ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு எந்த வேட்பாளர் 270-க்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகின்றாரோ அவரே அதிபராக வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
  • இதில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் ஒரு மாநிலத்தில் எத்தனை தேர்தல் வாக்குகள் இருக்கின்றனவோ, அதே எண்ணிக்கையில் அமெரிக்க மக்களவைக்கான இடங்களும் (காங்கிரஸ்) ஒதுக்கப்படுகின்றன. உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் அவைக்கு கலிபோர்னியா மாநிலம் 53 காங்கிரஸ் பிரதிநிதிகளையும் செனட் சபைக்கு 2 செனட்டர்களையும் – மொத்தம் 55 பிரதிநிதிகளை – அனுப்பும்.
  • அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை செனட் சபை என அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்களை தேர்வு செய்யும். அந்த வகையில் அமெரிக்க செனட் அவையில் 100 செனட்டர்கள் இருப்பார்கள்.us-presidential-debate-hilary-trump
  • அதிபர் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமில்லை. 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி கொண்டவர்கள் என்ற முறையில் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 330 மில்லியனில், சுமார் 219 மில்லியன் தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் சுமார் 142 மில்லியன் வாக்காளர்களே வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.
  • அதிபர் தேர்தலில் யார் வெல்கிறாரோ, அவருடன் இணைந்து போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளர் இயல்பாகவே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கென்று தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை.
  • ஆகக் கடைசியாக ராய்ட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரியே வெற்றி பெறுவதற்கு 90 சதவீத சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மொத்தமுள்ள தேர்தல் வாக்குகளில் 303 வாக்குகள் பெற்று ஹிலாரி வெற்றி பெறுவார் என்றும் 235 வாக்குகளை டிரம்ப் பெறுவார் என்றும் ராய்ட்டரின் அந்த கருத்துக் கணிப்பு மேலும் தெரிவிக்கின்றது.
  • இன்றைய தேர்தலில் வெற்றி பெறுபவர் அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்பார்.

-இரா.முத்தரசன்