Home Featured கலையுலகம் நடிகை சபர்ணா தற்கொலை செய்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி!

நடிகை சபர்ணா தற்கொலை செய்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி!

803
0
SHARE
Ad

Sabarna Tv Anchor Hot Photos

சென்னை – தொலைக்காட்சி நடிகை சபர்ணா மதுரவாயல் சேமாத்தம்மன் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

#TamilSchoolmychoice

அவரது இறப்பு தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், சபர்ணாவின் தந்தை காவல்துறையில் அளித்த புகாரில் தனது மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சபர்ணாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் சபர்ணா தற்கொலை செய்து இறந்திருப்பது உறுதியாகியுள்ளது.

எனினும், சபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.