Home 13வது பொதுத் தேர்தல் அஸ்ட்ரோ வெள்ளித்திரையின் வார இறுதித் திரைப்படங்கள்!

அஸ்ட்ரோ வெள்ளித்திரையின் வார இறுதித் திரைப்படங்கள்!

1112
0
SHARE
Ad

astro-202கோலாலம்பூர்- வேலை நெருக்கடி, மன அழுத்தம், மனச்சோர்வு என அனைத்தையும் மறக்கடிக்கும் வகையில் வருகிறது இவ்வார திரைப்படங்கள்.

பரபரப்பான வார நாட்களில் உண்டான சோர்வைப் போக்க, வார இறுதியில் உங்களது நேரத்தை ஒதுக்கி அஸ்ட்ரோ வெள்ளித்திரையில் (202) இரவு மணி 9.00க்கு ஒளியேரும் இத்திரைப்படங்களை குடும்பத்தோடு  கண்டு மகிழுங்கள்.

வெள்ளி (18.11.2016) – இரவு 9 மணிக்கு “பாபநாசம்”

#TamilSchoolmychoice

பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்திவரும் கமல் ஹாசன், தனது மனைவி கவுதமி மற்றும் இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது மகள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு அது ஒரு கொலையில் போய் முடிகிறது. படிக்காத கமல், தான் பார்த்த சினிமாக்களின் துணையோடு எப்படி தன் குடும்பத்தை புத்திசாலித்தனமாகக் காப்பற்றுகிறார் என்பதை கண்டு ரசிக்யுங்கள்.

சனி (19.11.2016) – இரவு 9  மணிக்கு “சவுகார்பேட்டை”

திகில், சஸ்பென்ஸ், பயமுறுத்தல், காமெடி மற்றும் பக்தி கலந்து அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் சவுகார்பேட்டை. இப்படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி ராய், மனோபாலா, வடிவுக்கரசி மற்றும் சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதுள்ளனர்.  ஜென்மங்கள் தாண்டி பழிவாங்கத் துடிக்கும் இப்பேய் கதையை பார்த்து ரசியுங்கள்.

ஞாயிறு (20.11.2016) – இரவு 9 மணிக்கு “வேலையில்லா பட்டதாரி”

தனுஷ் நடிப்பில் வெளிவந்த 25 வது திரைப்படம் “வேலையில்லா பட்டதாரி”. கட்டிடத் துறையில் பொறியியல் படிப்பை முடித்த தனுஷ் கிடைத்த வேலைக்கு செல்லாமல், படித்த வேலைக்காக காத்திருக்கும் வேளையில்  வாழ்வில் நடக்கும் ஒரு அசம்பாவிதம் எப்படி தன் எதிர்காலத்தை மாற்றி அமைக்கிறது என்பதை சுவாரசியமாக எடுத்துக்கூறும் இத்திரைப்படத்தை கண்டு மகிழுங்கள்.