கோலாலம்பூர் – டிரான்ஸ் பசிபிக் பார்டனர்ஷிப் (Trans Pacific Partnership) ஒப்பந்தம் திரும்பப் பெறப்படலாம் என்று கூறப்பட்டாலும் கூட, அமெரிக்கா மற்றும் அதில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவதில் மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
டிபிபி-ல் தொடர்புடைய அனைத்து நாடுகளுக்கும் தெரியும் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருக்கமாட்டார் என்று, எனினும் அவர் பதவி ஏற்கும் வரை இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுத்துவிட முடியாது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.