Home Featured நாடு செரண்டா நிலச்சரிவு: 64 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

செரண்டா நிலச்சரிவு: 64 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

1362
0
SHARE
Ad

serendah1உலு சிலாங்கூர் – செரண்டா, தாமான் இடாமனில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயமடைந்ததோடு, 10 வாகனங்களும், உணவுக்கடை ஒன்றும் சரிவில் சிக்கின.

இந்நிலையில், தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதோடு, நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகேயுள்ள 64 வீடுகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.