Home Featured கலையுலகம் நிஜமான பெற்றோர் யார்? – நேரில் ஆஜராக தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நிஜமான பெற்றோர் யார்? – நேரில் ஆஜராக தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவு!

751
0
SHARE
Ad
dhanush
சென்னை – நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார் என்றும் மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

அதோடு, தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தங்களுக்கு, தனுஷ் மாதம் 65,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரைப்பட நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.