சென்னை – மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்ததோடு, சென்னை போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதா இல்லம் சென்று அவரது தோழி சசிகலாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஜெயலலிதா மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மறைந்த ஜெயலலிதாவுக்குப் பதிலாக அடுத்த அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.