Home Featured நாடு ‘கொல்லப்பட்டது ஆப்ரஹாம் தான்’ – சபா காவல்துறை உறுதிப்படுத்தியது!

‘கொல்லப்பட்டது ஆப்ரஹாம் தான்’ – சபா காவல்துறை உறுதிப்படுத்தியது!

591
0
SHARE
Ad

gunmen-sabah2கோத்தா கினபாலு – செம்பூர்ணாவில் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கடத்தல் கும்பல் தலைவனின் அடையாளத்தை சபா காவல்துறை உறுதிப்படுத்தியது.

அவனது பெயர் ஆப்ரஹாம் என்ற இப்ராகிம் என்றும், சபா கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நடந்த பல்வேறு கடத்தல் சம்பவங்களில் அவனுக்குத் தொடர்பு உள்ளதாகவும் சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரசீத் ஹாருன் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.

இதற்கு முன்பு பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி இரவு, சபா கடற்பகுதியில் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரில், அபு சயாப் இயக்கத்தின்  முக்கியத் தலைவர்களில் ஒருவனான ஆப்ரஹாம் ஹமிட்டும் ஒருவன் என்று உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.