இந்திய வரலாற்றில் ஒரு மாநில தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் நுழைந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது இதுதான் முதன் முறை என்றும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ராம மோகனராவ் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
ராம மோகனராவுக்குப் பதிலாக தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் அவர் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிரிஜா 1981-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். தமிழக சுகாதார செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.