Home Featured தமிழ் நாடு ‘என் உயிருக்கு ஆபத்து’ – அலறும் ராம மோகன ராவ்!

‘என் உயிருக்கு ஆபத்து’ – அலறும் ராம மோகன ராவ்!

1050
0
SHARE
Ad

ram-mohanaசென்னை – கடந்த வாரம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி தலைமைச் செயலர் பதவியை இழந்த ஐஏஎஸ் அதிகாரி ராமமோகன ராவ், தன் வீட்டில் நடந்த சோதனை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடந்த சோதனை என வர்ணித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு ஆதரவாக பேசிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பால சுப்பிரமணியம் ஆகியோருக்கு நன்றி. வருமான வரித்துறை நடத்திய சோதனையில், என் வீட்டில் இருந்து இரண்டு ஆவணங்களில் அடங்கும் பொருட்களை தான் எடுத்தனர்”

என் வீட்டில், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினர், காலை 5:30 மணிக்கெல்லாம் நுழைந்து விட்டனர். தொடர்ந்து, 26 மணி நேரம், என்னை வீட்டுக்காவலில் வைத்தனர். எந்தவித ஆணையும் இன்றி என் வீட்டில் சோதனை நடத்தினர். அவர்களிடமிருந்த ஆணையில் எனது மகனின் பெயர் மட்டுமே இருந்தது. கருவுற்றிருந்த எனது மருமகள் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினர் சூழ்ந்து கொண்டனர்”

#TamilSchoolmychoice

எனக்குப் பணியிட மாறுதல் உத்தரவை வழங்க, தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை. அதற்கு, இரண்டு நிமிடம் போதுமே? தலைமை செயலர் பதவியில் இருந்து, இடமாற்றம் செய்த பிறகே, என்னை விசாரித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், எப்படி சோதனை நடத்த முடியும்? மத்திய அரசுக்கு, மாநில அரசு அலுவலகத்தில் என்ன வேலை? தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் நடக்கும், தலைமை செயலகத்தில் எப்படி அவர்கள் நுழையலாம்? அவர்களுக்கு, அந்தத் தைரியம் எப்படி வந்தது? ஜெயலலிதா இருந்தால் நுழைந்திருப்பார்களா?”

ஜெயலலிதா சொல்லியிருந்தபடி செயல்பட வேண்டும் என்பதில், நான் உறுதியாக இருப்பேன் என்பதால், என்னைக் குறி வைத்துள்ளனர். என் உயிருக்கு, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என் வீட்டில் இருந்து, எந்த முறைகேடான ஆவணங்களையும், வருமான வரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை. ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 320 ரூபாய் பணம், என் மனைவி, மகளுக்கு சொந்தமான 40 சவரன் நகைகள் மட்டுமே கிடைத்தன. அதோடு, விநாயகர், மகாலட்சுமி, பெருமாள் சிலைகள் போன்ற வெள்ளிப் பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன.” என்று ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கும் இதற்கு முன்பு வருமான வரிச் சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார்.