Home Featured நாடு அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக சுல்ஹஸ்னான் நியமனம்!

அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராக சுல்ஹஸ்னான் நியமனம்!

515
0
SHARE
Ad

zulhasnanபுத்ரா ஜெயா – அமெரிக்காவுக்கான புதிய மலேசியத் தூதராக டான்ஸ்ரீ டாக்டர் சுல்ஹஸ்னான் ரபீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையில் வெளியுறவுத் துறையில் துணையமைச்சராக இருந்த சுல்ஹஸ்னான், 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராகவும் சேவையாற்றினார்.

அதோடு, வாங்சா மாஜு, செத்தியாவாங்சா ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் 1999 முதல் 2004 வரையிலும், 2004 முதல் 2013 வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரையில், ஜியோமாத்திகா பல்கலைக்கழக வேந்தராகவும் சுல்ஹஸ்னான் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.