இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராமமோகன ராவ் வீட்டில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. தன்னை மத்திய ரிசர்வ் படையினர், வீட்டுச் சிறையில் வைத்ததாக அவர் கூறுவது சரியல்ல. அவர் வீட்டிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்கமும், பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ராமமோகன ராவ் தவறு செய்ததை ஒப்புக் கொண்டு அதற்கு துணை புரிந்தோரின் விவரங்களைக் கூற வேண்டும்”
“தவறு செய்தவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கருத்து. எனவே ராமமோகன ராவ் தற்போது அனுதாபம் தேடும் வகையில் பேசக் கூடாது” என்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்.