Home இந்தியா இல.கணேசன் : மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம்

இல.கணேசன் : மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம்

905
0
SHARE
Ad

சென்னை : தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அண்மைய நாட்களில் தமிழ் நாட்டிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக தலைவர்களில் இல.கணேசன் இரண்டாமவர் ஆவார். சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் ஆளுநராகவும் தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தற்போது இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு மற்ற கட்சிகளின் தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!” என ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.