Home Featured தமிழ் நாடு தலைமைச் செயலாளர் மகன் வீட்டில் சிக்கிய 10 கிலோ தங்கம்!

தலைமைச் செயலாளர் மகன் வீட்டில் சிக்கிய 10 கிலோ தங்கம்!

736
0
SHARE
Ad

ram-mohan-raoசென்னை – தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நேற்று புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அதோடு, ராம மோகன ராவின் மகன் விவேக், அவரது நண்பர்கள், உறவினர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், விவேக்கின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவில், 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதனை வாங்கியதற்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் விவேக் வழங்கியுள்ளார் என்றும், அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.