Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர் தற்கொலை முயற்சி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர் தற்கொலை முயற்சி!

572
0
SHARE
Ad

Coimbatoreகோவை – நேற்று வெள்ளிக்கிழமை கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர் ஒருவர் மரத்தில் ஏறி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

அவர் என்ன செய்கிறார் என்பதை முதலில் அறியாத சக போராட்டக்காரர்கள், திடீரென அவர் தூக்கில் தொங்கியதைப் பார்த்தவுடன் அவரை தூக்கி கழுத்து இறுகாமல் பாதுகாத்தனர்.

பின்னர், அங்கிருந்த மாணவர்களில் சிலர் மரத்தில் ஏறி கயிற்றை அவிழ்த்தனர்.

#TamilSchoolmychoice

கழுத்தில் சிறு காயத்துடன் தப்பித்த அம்மாணவரை மீட்ட போராட்டக்காரர்கள், உடனடியாக, கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நவீன் (வயது 25) என்ற அம்மாணவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த, விவசாயி நடராஜின் மகன் என்பதும், கோவையில் இரு நாட்களாக ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.