வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்குமான நட்புறவு பற்றி அப்பேச்சுவார்த்தை அமைந்தது என்றும், மேலும் அமெரிக்காவிற்கு வருமாறு மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார் என்றும் வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகின்றது.
மேலும், வணிகம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்த இருநாட்டு தலைவர்களும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும் என்று உறுதியெடுத்துள்ளனர்.