Home Featured கலையுலகம் ஷாருக்கானைக் காண அலைமோதிய கூட்டம் – நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!

ஷாருக்கானைக் காண அலைமோதிய கூட்டம் – நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!

761
0
SHARE
Ad

sharukகுஜராத் –  ‘ரேய்ஸ்’ படத்தின் விளம்பரத்திற்காக ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் கிராந்தி விரைவு இரயிலில் மும்பையிலிருந்து டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.

இரயில் நிலையங்களில் படிக்கட்டுகளில் நின்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில், வதோதராவில் அவரைக் காண வந்த ரசிகர் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகினார். அதோடு, கீழே விழுந்து இரு காவல்துறையினரும் காயமடைந்தனர்.

இந்நிலையில், பலியானவர் அந்த ஊரைச் சேர்ந்த அரசியல்வாதி ஃபரித் கான் பதான் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஷாருக்கான், “எங்களுடன் இரயிலில் பயணம் செய்த செய்தியாளர் ஒருவரின் உறவினர் தான் அவர். எதிர்பாராத விதமாக அவர் மாரடைப்பால் காலமானார். இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.