Home Featured நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜோகூர்: 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜோகூர்: 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்!

696
0
SHARE
Ad

floods segamat 2501ஜோகூர் – இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி, ஜோகூர் மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக சுமார் 10 மாவட்டங்களில் இருந்து 2,428 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 70 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் செகாமட் பகுதி தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். செகாமட்டிலிருந்து மட்டும் 2,012 குடும்பங்களைச் சேர்ந்த 6,609 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.