Home Featured நாடு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள காவல்துறை தயார்: காலிட்

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள காவல்துறை தயார்: காலிட்

613
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – மலேசியத் தலைவர்களைக் குறி வைத்துள்ள தீவிரவாத அமைப்புகள் உட்பட, நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை எதிர்கொள்ள காவல்துறை எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காலிட் கூறுகையில், “நமது தலைவர்களுக்கு எதிராக இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் நாங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம்.”

“அச்சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அது கவலையளிக்கக் கூடியது தான். ஆனால் அதை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.