Home Featured தமிழ் நாடு குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

833
0
SHARE
Ad

amudham11சென்னை – நாளை வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஆலயங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமார் 1.12 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சுமார் 15,000 துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்ட காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தற்போது நடைபெற்று வருகின்றது.