புதுடில்லி – பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா. அதற்கடுத்தது இரண்டாவது உயர்ந்த விருதாக வழங்கப்படும் பத்ம விபூஷன். மூன்றாவது விருது பத்ம பூஷன். அதற்கடுத்த நிலையில் வழங்கப்படுவது பத்மஸ்ரீ.
இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் பாடகர் ஜேசுதாஸ் (படம்), அரசியல் தலைவர் சரத் பவார், பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு இரண்டாவது உயரிய விருதான பத்மபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற மாரியப்பன், கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் கோஹ்லி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியாளர்கள் சக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மக்கர், ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றனர்.