Home இந்தியா ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்

703
0
SHARE
Ad

தோக்கியோ : இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 1) இரவு மலேசிய நேரப்படி 8.25 மணியளவில் நடைபெற்று முடிந்த பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹே பிங் ஜியாவ் என்ற விளையாட்டாளரைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அவர் இரண்டு பதக்கங்களைப் பெற்ற இந்திய விளையாட்டாளர் என்ற பெருமையை சிந்து பெறுகிறார்.

26 வயதான சிந்து 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.