Home நாடு பெரும்பான்மை உள்ளதென்றால் நிரூபியுங்கள் – மொகிதினுக்கு நஜிப் ரசாக் சவால்

பெரும்பான்மை உள்ளதென்றால் நிரூபியுங்கள் – மொகிதினுக்கு நஜிப் ரசாக் சவால்

642
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தங்களுக்குப் பெரும்பான்மை உள்ளதென அடிக்கடி கூறிக் கொள்ளும் பிரதமர் மொகிதின் யாசின் அதனை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கத் தயங்குவது ஏன் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எப்போதும் தங்களுக்கு ஏறத்தாழ 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக மொகிதின் தரப்பு கூறி வருகிறது. அப்படி இருந்தால், அந்த எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்க வேண்டியதுதானே, அதில் தயக்கம் காட்டுவது ஏன் என நஜிப் சவால் விடுத்தார்.

ஆனால், நாடாளுமன்றம் என்று வரும்போது ஏதாவது காரணம் சொல்லி, எந்தவித தீர்மானமாக இருந்தாலும் அதை வாக்கெடுப்புக்குக் கொண்டுவராமல் தவிர்த்து விடுவது ஏன் என்றும் நஜிப் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

ஏன் வாக்கெடுப்புக்கு இந்த அளவுக்குப் பயப்படுகிறார்கள் என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.