Home இந்தியா ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : இந்தியா அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வு

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : இந்தியா அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வு

623
0
SHARE
Ad

தோக்கியோ : தோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவின் ஹாக்கிக் குழு இந்த முறை பதக்கம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 3-1 கோல் எண்ணிக்கையில் இந்தியா பிரிட்டனைத் தோற்கடித்தது.

இதனைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நுழைகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக ஒலிம்பிக்சில் முதல் 4 குழுக்களில் ஒன்றாக இந்திய ஹாக்கிக் குழு தேர்வாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா பெல்ஜியத்தைச் சந்திக்கிறது.