Home நாடு நாடாளுமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் – நூர் ஹிஷாம்

நாடாளுமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் – நூர் ஹிஷாம்

410
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தின் அனைத்துக் கூட்டங்களும் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று பரவல், சுகாதார அமைச்சின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை செய்யப்படுவதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் எதிர்வரும் ஆகஸ்ட் 3 தொடங்கி, ஆகஸ்ட் 5 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற மேலவையும் ஒத்திவைக்கப்படுவதாக் நாடாளுமன்ற மேலவையின் செயலாளர் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நூர் ஹிஷாமின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

எனினும் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றப் பொதுக் கணக்காய்வுக் குழு தனது கூட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்தும் என அந்தக் குழுவின் தலைவர் வோங் கா வோ தெரிவித்திருக்கிறார்.

கொவிட் தடுப்பூசிகள் வாங்கப்பட்டது தொடர்பில் சுகாதார அமைச்சரையும், தலைமை இயக்குநர் நூர் ஹிஷாமையும் அந்தக் குழு விசாரணைக்கு இன்று அழைத்திருக்கிறது.