Home நாடு மாமன்னரும், ஆட்சியாளர் மன்றமும் தலையிட வேண்டும் – ஷாபி அப்டால் கோரிக்கை

மாமன்னரும், ஆட்சியாளர் மன்றமும் தலையிட வேண்டும் – ஷாபி அப்டால் கோரிக்கை

935
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : ஆட்சியில் நீடித்திருப்பதற்காக நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்திருக்கும் நடப்பு மொகிதின் யாசின் அரசாங்கத்தைக் கண்டித்த வாரிசான் சபா கட்சியின் தலைவர் ஷாபி அப்டால், மாமன்னரும், ஆட்சியாளர்கள் மன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்படாத நிலையில் திங்கட்கிழமை நடைபெற வேண்டிய நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி நாடாளுமன்றக் கூட்டத்தை அரசாங்கம் ஒத்தி வைத்திருப்பதற்கு ஷாபி கண்டனம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஜூலை 29-ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதில் யாருக்குமே தொற்று பாதிக்கவில்லை என்ற நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைத்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றக் கூட்ட ஒத்தி வைப்பு மட்டுமின்றி, அவசர கால சட்டங்களின் இரத்தும் முறையாக விளக்கப்படாதது கவலையளிப்பதாக ஷாபி தெரிவித்தார்.

முறையாக சட்டங்கள் நாட்டில் பின்பற்றப்படாவிட்டால் நாடு எந்த நிலைமைக்கு செல்லும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.