சிலாங்கூரில் மட்டும் 6,326 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,086 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. இந்த இரு மாநிலங்கள் தவிர்த்து மேலும் 3 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.
கெடா 1,511 தொற்றுகளையும், சபா 1002 தொற்றுகளையும் ஜோகூர் 1,045 தொற்றுகளையும் பதிவு செய்தன.
195,273 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களில் 1,059 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 531 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.