Home இந்தியா ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேற்றம்

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேற்றம்

593
0
SHARE
Ad

தோக்கியோ : பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, தொடர்ந்து அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடி, பூப்பந்து போட்டியில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

16 பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிந்து கடந்த புதன்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங் விளையாட்டாளரை 30 நிமிடங்களில் தோற்கடித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பானின் அகேன் யாமாகுச்சி என்ற விளையாட்டாளரை தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களிலும் 21-13, 22-20 புள்ளிகளில் தோற்கடித்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சிந்து.

#TamilSchoolmychoice

அடுத்த அரை இறுதி ஆட்டம் சிந்துவுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான தாய் ட்சு யிங் என்பவருடன் சிந்து மோதவிருக்கிறார்.

2016 ஒலிம்பிக்சில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் சிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.