Home Featured நாடு சபா உல்லாசப் படகு மூழ்கியது! தேடும் பணியில் நேரடியாக சீனா!

சபா உல்லாசப் படகு மூழ்கியது! தேடும் பணியில் நேரடியாக சீனா!

906
0
SHARE
Ad

sabah-missing catamaran

கோத்தாகினபாலு – சபா கடலோரப் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உல்லாசப் படகு மூழ்கிவிட்டதாக  அஞ்சப்படுகின்றது.

படகைச் செலுத்திய மாலுமியும், பணியாளர் ஒருவரும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படகு மூழ்கியுள்ளதாக நம்பப்படும் பகுதியில் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

#TamilSchoolmychoice

படகில் சீனாவைச் சேர்ந்த 28 பயணிகள் இருந்ததால், சீனாவின் கடற்படையும் அவர்களைத் தேடும் பணியில் நேரடியாக இணையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த சீனாவைச் சேர்ந்த 28 பயணிகளில் குழந்தைகளும் இருந்தனர் எனக் கூறப்படுகின்றது.