மார்ச் 21 – ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இன்று கூட்டம் தொடங்கியது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மனித உரிமை உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு தயாராக இருக்கும் தீர்மானங்கள் பட்டியிலடப்பட்டன.
தீர்மானத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்க தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இலங்கையுடனான உறவை துண்டிக்க முடியாது என இந்தியப் பிரதிநிதி கருத்து தெரிவித்துள்ளார். 13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமுல் படுத்த வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தினார்.
அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா., மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் முடிந்திருப்பதை இலங்கையில் சம உரிமை வழங்கும் தருணமாக பார்க்கிறோம் என தெரிவித்ததுடன், உலக நாடுகள் ஏற்கும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.