Home கலை உலகம் மும்பை குண்டுவெடிப்பு: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு , அப்துல் ரசாக்கிற்கு தூக்கு

மும்பை குண்டுவெடிப்பு: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு , அப்துல் ரசாக்கிற்கு தூக்கு

684
0
SHARE
Ad

indexமும்பை, மார்ச்21- 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு ‌சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டடைனயும் தடா நீதிமன்றம் விதித்தது.

இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

#TamilSchoolmychoice

அதில் சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஏற்கனவே சஞ்சய் தத் 1.5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டு சிறைவாசம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதனிடையே இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான யாகுப் அப்துல் ரசாக்கிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும் ஏற்கனவே 18பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது.

இவர்கள் சாகும் வரை சிறையிலேயே தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஜாமினில் வெளியே வந்தவர்கள் இன்னும் நான்கு வாரகாலத்த‌ிற்குள் மீண்டும் சிறையில் சரண்டர் ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.