யூ டியூப் எனப்படும் ஒளிநாடா வலைத் தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த ஒளிநாடாவை இதுவரை சுமார் 7 லட்சம் பேர் பார்த்துள்ளதாக புள்ளிவிவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய வெட்டுமர அனுமதி குறித்த ஊழல்களோடு சேர்த்து சரவாக் மாநிலத்தின் மொத்த ஊழல் விவகாரங்களையும் விசாரிக்க ஓர் அரச விசாரணைக் குழு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது.
இணையத்ததளத்தின் வழி விடுக்கப்பட்டுள்ள இந்த அரச விசாரணைக் குழு நியமிக்கும் கோரிக்கைக்கு இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சபா மாநிலத்தில் அடையாள அட்டை பிரச்சினை, தீவிரவாதிகள் ஊடுருவல் என பல பிரச்சினைகளை தீர்க்கவே நேரம் போதாமல் போராடிக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு புதிதாக முளைத்துள்ள சரவாக் அரசியல் பிரச்சனை பெரும் சவாலாக இருந்து வருகிறது.